20,000 எச்1பி விசாக்கள்-விண்ணப்பிக்க ஆளில்லை!
வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு பணிக்கு செல்வோர் பெற வேண்டிய எச்1பி விசாக்களில், 20 ஆயிரம் விசாக்களைப் பெற விண்ணப்பங்களே வரவில்லை என அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரும் அக்டோபர் மாதம் துவங்கும் 2010-ம் நிதியாண்டில், அமெரிக்காவில் பணியாற்ற வரும் வெளிநாட்டினருக்காக 65 ஆயிரம் எச்1பி விசாக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இவற்றிற்கு கடந்த 7-ம் தேதி வரை, 49 ஆயிரம் விண்ணப்பங்களே வந்துள்ளன. 20 ஆயிரம் விசாக்களுக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
பொதுவாக இந்த எச்1பி விசா அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே ஏராளமான விண்ணப்பங்கள் குவிவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கடந்த இரண்டு மாதங்களாக, தொடர்ந்து 20 ஆயிரம் எச்1பி விசாக்கள் காலியாக இருந்து வருகின்றன.
ஏராளமான விண்ணப்பங்களை நாங்கள் நிராகரித்தது ஒரு காரணம் என்றாலும், வழக்கமாக வரும் அளவு விண்ணப்பங்கள் வரவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை, என்றனர்.
இதர்கு முன், அமெரிக்க பொருளாதாரம் ஓஹோவென இருந்த காலங்களில், எச்1பி விசாவிற்காக விண்ணப்பித்தவர்களை, கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தது நினைவிருக்கலாம்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications