ஸ்வைன் ப்ளூ: பெங்களூரில் 'பிரா மாஸ்க்'!

இந் நிலையில் பெங்களூரில் ஒரு பத்திரிக்கை நிருபர், பெண்களின் பிராவை இரண்டாக வெட்டி அதை முகக் கவசம் போல மாற்றி விற்றபோது அதை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றுள்ளனர். அது பிரா என்று தெரியாமல் பலரும் வாங்கி முகத்தில் மாட்டிக் கொண்டனர்.
முகக் கவசங்கள் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மை தான் என்றாலும் முறையான 'மெடிக்கல் மாஸ்குகளால்' தான் அது சாத்தியம். அதுவும் அந்த முகக் கவசங்களை தினமும் மாற்றிவிட வேண்டும். ஒரே முகக் கவசத்தை மாதக் கணக்கில் அணிவது நோய் பரவலுக்கே வழி வகுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆனால், ஸ்வைன் ப்ளூ பீதி காரணமாக வெறும் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட மெடிக்கல் மாஸ்குகள் விலை 100 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. இந் நிலையில் எவ்வளவு காசைத் தந்தாலும் அவை கிடைப்பதும் அரிதாகிவிட்டது.
இந் நிலையில் முகக் கவசம் எதை விற்றாலும் மக்கள் முண்டியடித்தக் கொண்டு வாங்க ஆரம்பித்துள்ளனர். பெங்களூரில் சிவாஜி நகர், இப்ராகிம் சாகிப் தெரு பகுதியில் உள்ள சாதாரண டெய்லர் கடைகளில் சாதாரண துணிகளக் கொண்டு தினமும் ஆயிரக்கணக்கான முகக் கவசங்கள் தைக்கப்பட்டு நகர் முழுவதும் விற்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கவசங்களால் எந்தவிதத்திலும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் மக்களிடையே முகக் கவசம் குறித்த விழிப்புணர்வு எந்த அளவுக்கு உள்ளதை என்பதை அறிய பெங்களூரில் ஒரு பத்திரிக்கை நிருபர் மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 'பிரா மாஸ்க்கை' விற்றுப் பார்த்தார். ஒரு மணி நேரத்தில் அவர் கொண்டு சென்ற 'பிரா மாஸ்குகள்' அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
தன்னிடம் அதை வாங்கியவர்களை உடனுக்குடன் அவரே விரட்டிச் சென்று உண்மையைச் சொல்லி காசையும் திருப்பித் தந்துவிட்டார் அந்த நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications