மும்பை தாக்குதல்-தீவிரவாதிகள் பயன்படுத்திய சீன மொபைல்கள்

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 180 பேர் வரை பலியானார்கள்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 9 பேரை சுட்டுகொன்ற போலீசார் அஜ்மல் கசாப் என்பவனை மட்டும் உயிரோடு பிடித்துள்ளனர். இதன்மூலம் இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை இந்திய அரசு உறுதிபடுத்தியுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானில் இருக்கும் சில தீவிரவாதிகளை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு இருக்கும் தொடர்பை உறுதிபடுத்த இன்னொரு ஆதாரமும் சிக்கியுள்ளது. அது இறந்து போன தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து நோகியா மொபைல் போன்கள்.
இந்த மொபைல் போன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு, பாகிஸ்தானில் உள்ள யுனைடெட் மொபைல் மற்றும் டுவல்வ் பாகிஸ்தான் நிறுவனங்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை நோகியா நிறுவனத்தின் அமுலாக்க பிரிவு மானேஜர் தனது வாக்குமூலத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.
அவர் இன்று இது குறித்து அமெரிக்காவிலுள்ள எப்.பி.ஐ அலுவலகத்தில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அவர் வாக்குமூலம் கொடுத்தார்.
அதில், சர்வதேச மொபைல் அடையாள எண்ணை கொண்டு எந்தவொரு நோகியோ போனின் வரலாற்றையும் எளிதாக சொல்லிவிடலாம். இந்த ஐந்து மொபைல்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டு பாகிஸ்தானில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications