மூளைச்சாவு-திருச்சி மாணவன் உடல் உறுப்புகள் தானம்
திருச்சி: திருச்சியில் சாலை விபத்தில் மூளைச்சாவை சந்தித்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை அவனது பெற்றோர் தானமாக வழங்கினர்.
திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு நிர்மல்குமார்(13), பத்மநாபன் என இரு மகன்கள்.
மூத்த மகன் நிர்மல்குமார் கரூரில் இருக்கும் தனது தாத்தா வீட்டில் தங்கி 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் வார விடுமுறைக்காக பெற்றோரை பார்க்க தனது தாத்தாவுடன் திருச்சி வந்த நிர்மல் குமார் 9ம் தேதி இரவு காரில் கரூர் திரும்பினர்.
அவருடன் தாத்தா மணி, பாட்டி லெட்சுமி, அத்தை சியாமளா ஆகியோர் சென்றனர். இந்நிலையில் கார் பெருகமணி என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்த போது கரூரில் இருந்து திருச்சி நோக்கி ஜல்லி கற்களை கொண்டு சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சியாமாளா, கார் டிரைவர் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார்கள். மற்ற மூவரும் பலத்த காயத்துடன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் மூன்று நாள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் மாணவன் நிர்மல்குமார் மூளைச்சாவு அடைந்தார். இது குறித்து டாக்டர்கள் சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த சிறுவனின் தந்தை வைத்தியநாதன் தனது மகனின் உடல் உறுப்பகளை தானம் வழங்குவதாக தெரிவித்தார்.
இதையடுத்து அந்த சிறுவனின் உடல் திருச்சி ஏபிசி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சிறுவனின் சிறுநீரகம், கல்லீரல், கண்கள் ஆகியவை அகற்றப்பட்டன. அவரது கல்லீரல் வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மற்ற உறுப்புகள் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தானமாக வழங்கப்பட இருக்கிறது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications