இளையான்குடி தேர்தல்-தடைவிதிக்க ஹைகோர்ட் மறுப்பு
சென்னை: இளையான்குடி இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இளையான்குடி சட்டமன்றத் தொகுதியில் மக்கள் மாநாட்டு கட்சி சார்பில் கலைமணி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரது வேட்பு மனுவை முன்மொழிந்தவர் தனது மனுவில் வேட்பாளர் பட்டியல் எண்ணை தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி கலைமணியின் மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார்.
இதை எதிர்த்து மக்கள் மாநாட்டு கட்சியின் செயலாளர் சதீஷ்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுகுணா, வேட்பாளர் கலைமணியின் வேட்பு மனுவை நிராகரித்தது தவறு என்றும், அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட நபர் வழக்கு தொடராமல் அவர் சார்ந்த கட்சி வழக்குத் தொடர தகுதியில்லை என்றும் தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து மக்கள் மாநாட்டு கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில், இந்த விவகாரத்தில் வழக்கு தொடர தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கலைமணியின் வேட்பு மனுவை நிராகரித்தது தவறு என்று நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தேர்தல் ஆணையமும் மேல் முறையீடு செய்தது.
இந்த இரு மேல்முறையீட்டு மனுக்களும் நீதிபதி முருகேசன், நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது மக்கள் மாநாட்டு கட்சியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளையான்குடி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரினார். ஆனால் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள் இந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications