'திருமதி'-கருணாநிதிக்கு ஜெயலலிதா கண்டனம்

கொட நாடு எஸ்டேட்டில் ரெஸ்ட் எடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா'' என்று பெண்ணின் உயர்வு பற்றி கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடினார். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று முழங்கினார் மகாகவி பாரதி.
இப்படி பெண்மையை போற்றியவர்கள் பலர் வாழ்ந்த தமிழ்நாட்டில், பெண் இனத்தை இழிவுப்படுத்தும் வகையில் முதல்வர் கருணாநிதி தொடர்ந்து பேசி வருவது பெண் இனத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய கொடுமையாகும்.
அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாநிதி, என்னை "திருமதி ஜெயலலிதா'' என்று கொச்சைப்படுத்தி கேலி செய்து பேட்டி அளித்திருக்கிறார்.
"ஏன் திருமதி ஜெயலலிதா'' என்று சொல்கிறீர்கள்? என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு "மைனாரிட்டி அரசு'' என்று அவர் சொல்கிற வரை இப்படித் தான் சொல்வேன்'' என்று பதிலளித்து இருக்கிறார் கருணாநிதி.
பெரும்பான்மை இல்லாத அரசை ''மைனாரிடடி அரசு'' என்று அழைப்பது நடைமுறையில் உள்ள ஒன்று தான். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் திமுகவிற்கு பெரும்பான்மை இல்லாததால், அதை ''மைனாரிட்டி திமுக அரசு'' என்று நான் குறிப்பிடுகிறேன். உண்மை நிலையை விளக்கிச் சொல்வதில் தவறு ஏதுமில்லை.
"மைனாரிட்டி திமுக அரசு'' என்று நான் சொல்வதன் காரணமாக என்னை ''திருமதி ஜெயலலிதா'' என்றுதான் குறிப்பிடுவேன் என்று கருணாநிதி சொல்வது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது. என்னை இழவுபடுத்துவதாக, கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு கருணாநிதி இது போன்று பேட்டி அளித்திருக்கிறார்.
கடவுள் உட்பட அனைத்துத் தலைவர்களையும் கொச்சைப்படுத்தி பேசுவது, கேலி செய்வது, கிண்டல் செய்வது கருணாநிதியின் வாடிக்கை. அதனால், என்னை இழிவுப்படுத்திப் பேசியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை.
என்னை இழவுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதி பேசி வருவதும், பேட்டி அளித்திருப்பதும் பெண் இனத்தையே இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, பெண்மையை, பெண் இனத்தை கேலி செய்யும் விதமாக, இழிவுப்படுத்தும் விதமாக, கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசிவரும் திமுக அரசின் முதல்வர் கருணாநிதியை கண்டித்து, அதிமுக வட சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் வரும் 18ம் தேதி (இடைத் தேர்தல் நடக்கும் நாளில் என்பது குறிப்பிடத்தக்கது) காலை 9.30 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மகளிர் மட்டுமே பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக மகளிர் அணிச் செயலாளர் வளர்மதி தலைமையிலும், வட சென்னை மாவட்ட செயலாளர் பிகே.சேகர்பாபு முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்! -
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி..வைத்தியலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?குறுக்கே வந்த இளைஞர்.. போச்சே -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications