போதையில் சில்மிஷம்- தந்தையை கொன்ற மகன்
நெல்லை: நெல்லை அருகே குடித்துவிட்டு பெண்களிடம் சில்மிஷம் செய்து வந்த தந்தையை, அவரது மகன் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் மேலக்கொட்டாரத்தை சேர்ந்தவர் சுடலையாண்டி. கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வம். இவர்களுக்கு மாரியம்மாள் என்ற மகளும், நாராயணன் என்ற மகனும் உள்ளனர். மாரியம்மாளுக்கு திருமணமாகி விட்டது. நாராயணன் தூத்துககுடியில் லாரி டிரைவராக வேலை பார்தது வருகிறார்.
சுடலையாண்டி குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அவர் குடிபோதையில் பெண்களிடம் சில்மிஷம் செய்வதும் உண்டாம். இதனையடுத்து நாராயணன் அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்டபாடில்லை.
இந்நிலையில் நேற்று இரவு நாராயணன் வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது சுடலையாண்டி குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது நாராயணன் குடித்து விட்டு இனி வீட்டுக்கு வரக்கூடாது என்று தனது தந்தையிடம் சத்தம் போட்டுள்ளார்.
இதில் தந்தை, மகனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சுடலையாண்டி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
அவரை தேடி நாராயணன் சென்றுள்ளார். அப்போது சுடலையாண்டி பக்கத்து வீட்டில் அரைகுறை நிர்வணமாக படுத்து தூங்கியுள்ளார். இதனை கண்ட நாராயணன் ஏன் இப்படி அலங்கோலமாக படுத்திருககீறர்கள் என்று சத்தம் போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த நாராயணன் தனது தந்தையை அரிவாளால் வெட்டியுள்ளார். வெட்டு பட்ட சுடலையாண்டி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ஆனால் நாராயணன், அவரை விரட்டி, விரட்டி சராமரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுடலையாண்டி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நாராயணனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications