எம்.ஜி.ஆர். சமாதிக்கு வெடிகுண்டு மிரட்டல் - வாலிபர் கைது
சென்னை: வீட்டில் போர் அடித்ததால் சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடம் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என செல்போன் மூலம் போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த வேலூர் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 15ம் தேதியன்று சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், எம்.ஜி.ஆர்.சமாதியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். கடலூரில் உள்ள 55 பேர் பத்திரமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் எல்லோரும் பத்திரமாக இருக்க மாட்டீர்கள் என்று கூறியுள்ளார் அதில் பேசிய மர்ம நபர்.
இதையடுத்து அண்ணா சதுக்கம் போலீஸாருக்குத் தகவல் பறந்தது. அவர்கள் உடனடியாக சமாதியை முழுமையாக சோதனையிட்டனர். அதில், குண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து புரளி கிளப்பிய நபரைப் பிடிக்க வேட்டை முடுக்கி விடப்பட்டது.
சைபம் கிரைம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலு (39) என்பவர் செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.
வேலூர் அருகே ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் வேலு, சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை வந்து மனைவி, குழந்தைகளை பார்த்து விட்டு செல்வாராம்.
இந்த முறை சென்னை வந்தபோது செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வீட்டில் இருக்கும்போது நேரம் போகவில்லை-அதனால் விளையாட்டுப் போக்கில் செல்போனில் அப்படி பேசி விட்டேன் என்று கூறியுள்ளார் வேலு.
இதையடுத்து கைது செய்யப்பட்ட வேலு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications