தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்காது - கம்யூ.வுக்கு எதிர்காலம் கிடையாது: தங்கபாலு
தூத்துக்குடி: நடைபெற உள்ள இடைத் தேர்தலில் தேமுதிக டிபாசிட் கூட வாங்க முடியாது. அதேபோல கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்காலமே கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டியை ஆதரித்து, நேற்று மாலை ஸ்ரீவைகுண்டத்தில் தேர்தல் பிரசார நிறைவு கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கலந்து கொண்டு பேசியதாவது ..
இந்த தேர்தலில் வெற்றி பெறமுடியாது என, தெரிந்து விட்டதால் தான் ஜெயலலிதா தேர்தலை புறக்கணித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.
எனவே தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக ஒரு ஜெயலலிதா அல்ல, ஓராயிரம் ஜெயலலிதாவும் வந்தாலும் இனி அரசியல் நடத்த முடியாது.
தமிழகத்தில் ஜாதிக் கட்சிகளுக்கும், நடிகர் கட்சிகளுக்கும் இடமில்லை என்ற தெளிவான தீர்ப்பை நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மக்கள் தந்துள்ளனர்.
கடந்த தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி ஒரு இடத்தில் கூட டிபாசிட் வாங்கவில்லை. இனியும் அக் கட்சியால் டிபாசிட் வாங்க முடியாது.
தென் தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் சேது சமுத்திர திட்டத்தில், 75 சதவீத பணிகள் முடிந்து விட்டன. சுப்ரீம் கோர்ட்டிலுள்ள தடையை நீக்கி மீதமுள்ள 25 சதவீத பணிகளும் விரைந்து முடிக்கப்படும்
கம்யூ.க்களுக்கு இனி எதிர்காலம் கிடையாது...
காங்-திமுக கூட்டணி பலமான கூட்டணி. இது தொடர்ந்து வெற்றி பெற்று வருவதற்கு காரணம் இதன் சாதனைகள்தான். கடந்த 2004ல் தொடங்கிய கூட்டணி அனைத்து தேர்தல்களிலும் வெற்றியைதான் பெற்று வருகிறது. இந்தியாவை வளரும் நாடுகளில் முதன்மையாக மாற்றிய பெரு்மை இந்த கூட்டணிக்கே சேரும். சோனியாவை அடுத்த பிரதமர் என்று முதலில் அறிவித்தது தமிழக முதல்வர்தான். இதை மறக்க மாட்டோம். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு போட்டி போட்டு பணிகளை செய்கிறது.
தமிழகத்திற்கு மட்டும் கடந்த ஆட்சியில் 56 ஆயிரம் கோடி ரூபாய் நலத்திட்டங்கள் வந்தது. வேறு எந்த மாநிலத்திற்கும் இந்த பெருமை கிடையாது. அதற்கு இந்த கூட்டணி தான் காரணம்.
கடந்த 5 ஆண்டுகளில் 69 திட்டங்கள் நிறைவவேற்றப்பட்டுள்ளன. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தொழில் வளம் இல்லை என்றார்கள். 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அனல் மின் மின்சார நிலையம் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட உள்ளது.
அதனால்தான் அதிமுக போன்ற கட்சிகள் இன்று களத்தில் எங்கள் கூட்டணியை சந்திக்க பயப்படுகின்றன. 5 தொகுதிகளிலும் திமுக-காங் கூட்டணி வெற்றி பெருவது உறுதி.
கம்யூனிஸ்டுகளுக்கு தமிழகத்தில் இனி எதிர்காலம் இல்லை. அவர்கள் தேய்பிறையாக போய்விட்டார்கள். இனி ஜாதி கட்சிகளுக்கு இடம் இல்லை என்பதை மக்கள் கடந்த தேர்தலில் நிரூபித்து விட்டார்கள் என்றார் அவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications