காஷ்மீரில் டிவி பார்க்க லஷ்கர்-ஏ-தொய்பா தடை!
டெல்லி: காஷ்மீரில் உள்ள சில கிராமங்களில் டிவி பார்க்க லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் தடை விதித்திருப்பதாகவும், மீறுபவர்களை சாட்டையால் அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிகிறது.
காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பனிஹல் நகர் இருக்கிறது. இந்த நகர் மற்றும் அருகில் இருக்கும் கிராமப்புற மக்கள் டிவி பார்க்க கூடாது. அது இஸ்லாமுக்கு எதிரானது என கூறி லஷ்கர் தீவிரவாதிகள் தடை விதித்துள்ளனர். இதை மீறி டிவி பார்ப்பவர்களை சாட்டையால் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
கால்களிலும், முதுகிலும் அடி வாங்கிய தழும்புகளுடன் இருக்கும் குலாம் நபி என்பவர் கூறுகையில்,
வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலர் உள்ளே புகுந்து, என்ன சராமரியாக அடித்து உதைத்தனர். டிவியை தூக்கி போட்டு உடைத்துவிட்டனர் என்றார்.
அருகிலிருக்கும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,
சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு ஆறு தீவிரவாதிகள் வந்தனர். அவர்களில் மூன்று பேர் டிவியை உடைத்தனர். மற்றவர்கள் என்ன தாக்கினர். அவர்கள் டிவி பார்ர்ப்பது ஒரு பாவச்செயல் என கூறியுள்ளனர். ஆனால், உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் டிவி பார்ப்பதை நிறுத்த கூடாது என கேட்டு கொள்கிறேன்.
அவர்கள் டிவியை மூட்டாள்களின் பெட்டி என்றனர். இதனால் அனைத்து பிரச்சனைகளுகம் உருவாகிறது. இது மக்களின் மனதில் தவறான எண்ணங்கலை வளர்க்கிறது என்றார்.
இது குறித்து ஜம்மு பகுதி ஐஜி சோக் குப்தா கூறுகையில், டிவி அதிக சக்தி வாய்ந்தது. இது தீவிரவாதிகளின் முகமூடியை கிழித்துவிடுவதால் அவர்கள் இது போன்ற உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் வெறுப்பில் இருக்கின்றனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications