காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர் சாவு
சென்னை: சென்னையில் நீலாங்கரை காவல் நிலையத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கை அழைத்து செல்லப்பட்டவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதையடு்த்து அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்யாறைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவரது மனைவி உஷா ராணி (32). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சென்னை கொட்டிவாக்கத்தில் வசிக்கும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்த ரமேஷ் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார்.
கணவரின் தொல்லை தாங்க முடியாத உஷா ராணி, சென்னை நீலாங்கரை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் அவரை நேற்று இரவு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையின் போது அவர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். போலீசார் அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ரமேஷ் வழியிலேயே இறந்தார்.
விசாரணைக்கு வந்தவர் பலியான சம்பவம் பற்றி அறிந்த அடையாறு போலீஸ் துணை கமிஷ்னர் திருஞானம், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ரமேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ரமேஷின் உறவினர்கள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அடையார் மருத்துவமனையின் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications