பெண்ணை கற்பழித்த போலீஸ்காரருக்கு கத்தி குத்து

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அருகே வாசுதேவநல்லூரில் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கற்பழித்த போலீஸ் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.

நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே ஆத்துவழி என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியை பிள்ளையார் என்பவரின் மகன் சுரேஷ்குமார். ராஜபாளையத்தில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரும் இதே ஊரை சேர்ந்த துரை என்பவரின் மகள் வனிதாவும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்வதகா கூறி சுரேஷ்குமார், வானிதாவை கற்பழித்துள்ளார். இதில் வனிதா கர்ப்பமடைந்தார். இந்த விஷயத்தை வனிதா, சுரேஷ்குமாரிடம் கூறிய போது அவர் கருவை கலைத்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என கூறிவிட்டார்.

சுரேஷ்குமார் வீட்டினர் அவருக்கு வேறு ஒரு இடத்தில் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து ஆத்திரமடைந்த வனிதாவின் தந்தை துரை மற்றும் அண்ணன் சதன் இருவரும் சேர்ந்து ஆத்துவழி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சுரேஷ்குமாரை கத்தியால் குத்தினர்.

இதில் சுரேஷ்குமார் பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வாசுதேவநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், வழக்கு பதிவு செய்து துரையை கைது செய்தனர்.

வனிதாவின் அண்ணன் சதன், இச்சம்வத்துக்கு துணை போன பஞ்சாயத் தலைவரின் கணவர் அண்ணாமலை மற்றும் ஸ்ரீதரை உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே வனிதா, வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுரேஷ்குமார் கற்பழித்ததாக புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சுரேஷ்குமாரின் தந்தை பிள்ளையார், தாய் லட்சுமி மற்றும் அக்காவையும் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+