ரீடர்ஸ் டைஜஸ்ட் திவால்: பாதிப்பில்லை- எச்சிஎல்
ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்தின் திவால் அறிவிப்பால் அந்த நிறுவனத்துடனான தங்கள் ஒப்பந்தத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்துடன் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏழு வருட அவுட்சேர்ஸிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது எச்சிஎல்.
இந்த திவால் அறிவிப்புக்கு முன்னதாகவே, தனது முக்கிய கடனாளர்களுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். அதன்படி, அமெரிக்க நீதிமன்ற மேற்பார்வையில் ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனம் மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். இதனால் பல நெருக்கடிகளிலிருந்து நிறுவனம் தப்பிக்கும். இதற்காகத்தான் திவால் அறிவிப்பை வெளியிடுகிறது ரீடர்ஸ் டைஜஸ்ட்.
மேலும் இந்த திவால் அறிவிப்பு ரீடர்ஸ் டைஜஸ்டின் அமெரிக்க பிரிவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் இந்திய சப்ளையரான தங்களை பாதிக்காது என்றும் எச்சிஎல் அறிவித்துள்ளது.
ரீடர்ஸ் டைஸ்டின் 45 நாட்டு கிளைகளில் 14 மொழிகளுக்கான ஐடி கட்டமைப்புப் பணிகள், இயக்க மேம்பாடு உள்ளிட்டவற்றின் அவுட்சோர்ஸிங்கை எச்சிஎல் கவனித்து வருகிறது.
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வெறும் 12 நிமிடங்களில் ரூ.94.5 லட்சம் கோடி லாபம்.. ஒரே நாளில் எல்லாம் மொத்தமா மாறிடுச்சு -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன?












Click it and Unblock the Notifications