குஜராத் கடலோர பகுதிகளுக்கு லஷ்கர் குறி
அகமதாபாத்: குஜராத் மாநில கடலோர பகுதிகளை லஷகர்-இ-தொய்பா தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை வழங்கியதை அடுத்து, அங்கு பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள கோடஸ்வர் பகுதிக்கு வடக்கே இருக்கும் கோரி மற்றும் படாலா நீர் பகுதிகள் தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம் கொண்டவையாக உள்ளன.
இப்பகுதியில் ஊடுருவும் தீவிரவாதிகள் அருகில் இருக்கும் மாங்குரோவ் காட்டு பகுதிகளுக்கு சென்று ஒழிந்து கொண்டால், அவர்களை தேடிபிடிப்பது கடினம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சகம், குஜராத் மாநில அரசு மற்றும் பல பாதுகாப்பு படை அமைப்புகளுக்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இந்த பகுதி வழியாக ஊடுருவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது.
மேலும், கோடஸ்வர் மற்றும் மான்ட்வி துறைமுக பகுதிகளை அவர்கள் குறிவைததிருப்பதாகவும், அவர்கள் தங்களது உதவிக்கு சில மீனவர்கள் ஈடுபடுத்தலாம் என்றும்தெரிவித்துள்ளது.
இதையடுத்து குஜராத் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலோர பகுதிகளில் ரோந்து எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சமீபத்தில் மேற்கு கட்ச் பகுதியில் உள்ள மின் நிலையத்துக்கு அருகில் 9 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications