சென்னையிலிருந்து பயிற்சிக்காக லண்டன் சென்ற இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர் கொலை
கொல்கத்தா: சென்னை நிறுவனத்திலிருந்து பயிற்சிக்காக லண்டனுக்கு சென்றிருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த காஜி வாசிம் அக்தர் என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் லண்டன் ஹோட்டலில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். அவரைக் கொன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்காள மாநிலம் சுரி மாவட்டத்தை சேர்ந்தவர் காஜி வாசிம் அக்தர். 25 வயதாகும் இவர் சென்னையைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 6ம் தேதி பயிற்சிக்காக அக்தரை, சென்னை நிறுவனம் லண்டனுக்கு அனுப்பியது. லண்டன் சென்ற அக்தர், அங்கு தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.
இத்தகவலை திங்கள்கிழமை லண்டன் போலீஸார், அக்தரின் தந்தையான அப்துல் மோஹிப்புக்குத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்துல் கூறுகையில், லண்டனுக்கு கடந்த 6-ந் தேதி எனது மகன் அக்தர் சென்றார். அதன் பிறகு பாரீஸ் சென்றுவிட்டு இந்தியா திரும்புவதாக இருந்தது. தினமும் எங்களுடன் தொலைபேசியில் பேசினார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அவரிடம் இருந்து எந்த செல்போன் அழைப்பும் வரவில்லை.
நாங்கள் போனில் தொடர்பு கொண்டபோது எந்தவித பதிலும் இல்லை. எனவே, குழப்பத்தில் இருந்தோம். இந்த நிலையில், திங்கட்கிழமை அன்று லண்டன் போலீஸ் அதிகாரி ஒருவர் எங்களை தொடர்பு கொண்டு, எனது மகன் இறந்து விட்டதாக தெரிவித்தார். அதனால், நாங்கள் கடும் அதிர்ச்சி அடைந்தோம்.
திங்கட்கிழமை இரவு 1 மணி அளவில் மற்றொரு போலீஸ் அதிகாரி பேசினார். எனது மகன் தங்கியிருந்த ஓட்டல் அறையின் படுக்கையில் பிணமாக இருந்ததாக தெரிவித்தார். மேலும், முழுமையாக விசாரணை நடத்துவதற்கு மூன்று நாட்கள் ஆகும் என்றும், அதன் பிறகு உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார் என்றார்.
அக்தரைக் கொன்றது யார் என்று தெரியவில்லை. எதற்காக கொலை நடந்தது என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து லண்டன் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications