சென்னை-2 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை
சென்னை: சென்னையில் டாக்டர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கிரில் கொள்ளையர்கள் தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
சென்னை, தி.நகர் மோதிலால் தெருவில் வசித்து வரும் டாக்டர் நரசிம்மன், சென்னை மருத்துவ கல்லூரி போரசிரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வத்சலா (66).
இன்று அதிகாலை சுமார் 3 மணிக்கு இவர்களது வீட்டு கிரில்லை மெஷின் மூலம் சத்தமில்லாமல் அறுத்துவிட்டு கொள்ளை கும்பல் உள்ளே நுழைந்துள்ளது.
பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, 2 வைரம் பதித்த வளையல்கள், 2 வைர தோடு மற்றும் அவர்களின் வங்கி லாக்கர் சாவி ஆகியவற்றை திருடியது.
இந்நிலையில் வீட்டுக்குள் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்த நரசிம்மனும், அவரது மனைவியும் விளக்கை போட்டனர். அப்போது பீரோ இருக்கும் அறைக்குள் இருந்து மூன்று பேர் வெளியே ஓடுவதை கண்ட அவர்கள் கூச்சலிட்டனர். அவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் தப்பிவிட்டது.
சௌகார்பேட்டையில் 8 பவுன் கொள்ளை...
மற்றொரு சம்பவம் சென்னை, சௌகார்பேட்டையில் நடந்துள்ளது. அப்பகுதியிலுள்ள கிருஷ்ணபட்டணம் தெருவை சேர்ந்த மதன்சிங் (36) என்பவர் தனது குடும்பத்தினரோடு, திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.
நேற்று இரவு அவரது வீட்டு கதவை உடைத்து, பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளது ஒரு கும்பல்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications