அஸ்ஸாம், மேகாலயா, மிஸோரமில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஷில்லாங்: அஸ்ஸாம், மேகாலயா, மிஸோரம் மாநிலங்களில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மாலை 4.15 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அளவு 4.9 ரிக்டராக இருந்தது.
அஸ்ஸாம், மேகலாயா மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் மிஸோரமின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலம் சோந்திப்பூர் மாவட்டத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.
உயிரிழப்பு அல்லது பொருள் இழப்பு குறித்து இதுவரை தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications