அமெரிக்கா: அலாஸ்காவில் பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
ஆன்கரேஜ்: அலாஸ்காவில் பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.0 புள்ளிகளாகப் பதிவானது.
நேற்று காலை அமெரிக்க நேரப்படி சுமார் 10.19 மணிக்கு அலாஸ்கா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அலாஸ்காவின் மத்திய பகுதியில் உள்ள ஆன்கரேஜ் நகரிலிருந்து 31 கிமீ மேற்கே மையமிட்டது இந்த நிலநடுக்கம். இது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தெற்கு அலாஸ்கா பகுதி மக்களும் உணர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆன்கரேஜ் நகரில் உள்ள கட்டிடங்கள் ஆட்டம் கண்டதால் மக்கல் அனைவரும் பீதியில் தெருவுக்கு ஓடி வந்தனர். சேதம் குறித்து உடனடியாக தகவல் கிடைக்கவில்லை.
பூகம்பத்தால் அப்பகுதியில் சுனாமி எதுவும் உருவாகவில்லை என அலாஸ்கா சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications