ஆஸி. விமானத்துக்கு மும்பையில் மிரட்டல்-மும்பை கால் சென்டருக்கு போன்
மெல்போர்ன்: மெல்போர்ன் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி மும்பையில் உள்ள கால் சென்டருக்கு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ்.கியூ 227 என்ற அந்த விமானத்தில் 198 பயணிகளும், 20 ஊழியர்களும் இருந்தனர். இந்த விமானம் இன்று மெல்போர்னை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறி மும்பையில் உள்ள ஒரு கால் சென்டருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
இதையடுத்து மெல்போர்ன் விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. மேலும் விமானத்தின் விமானிக்கும் தகவல் தரப்பட்டது. இதையடுத்து விமான ஊழியர்கள், பயணிகளிடம் இதைத் தெரிவித்தனர். இதனால் விமானத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அதன் பின்னர் ஊழியர்கள் விமானம் முழுவதையும் சோதனையிட்டபோது அதில் குண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து விமானத்தில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.
பின்னர் விமானம் மெல்போர்ன் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் மீண்டும் விமானம் முழுமையாக சோதனையிடப்பட்டது. அப்போது வெடிகுண்டு இல்லை, அது வெறும் வதந்தி என்று தெரிய வந்தது.
மிரட்டல் எங்கிருந்து வந்தது, விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications