For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொண்டாமுத்தூரில் காங். வெற்றி-கொ.மு.க பெரும் வளர்ச்சி

By Staff
Google Oneindia Tamil News

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.என். கந்தசாமி 71,487 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

மதிமுகவிடமிருந்து இத்தொகுதியைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ்.

வேட்பாளர்கள் வென்ற வாக்குகள்:
கந்தசாமி (காங்.) - 1,12,350
கே.தங்கவேலு (தேமுதிக) - 40,863
ஈஸ்வரன் (கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்)-19,558
பெருமாள் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)-9,186
சின்னராஜ் (பாஜக)- 9,045

இதன்மூலம் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டும் டெபாசிட் இழந்துள்ளன.

கலையாத அதிமுக ஓட்டு வங்கி..

இந்தத் தொகுதியில், திமுக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரிய அளவில் வாக்கு வங்கி ஏறவில்லை. காரணம் புதுக் கட்சியான கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் மற்றும் அதிமுக கூட்டணியின் ஓட்டு வங்கியில் பெரிய அளவில் விரிசல் விழாதது.

கடந்த பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிட்டது. அக்கட்சி வேட்பாளர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் 1,13,596 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

மதிமுக சார்பில் போட்டியிட்ட கண்ணப்பன் 1,23,490 வாக்குகளைப் பெற்று வென்றார்.

தேமுதிக வேட்பாளர் டென்னிஸ் கோவில் பிள்ளை 37,901 வாக்குகளும், பாஜக வேட்பாளர் சின்னராஜ் 13,545 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இம்முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கந்தசாமிக்கு கிடைத்த ஓட்டுக்கள் 1,12,350 மட்டுமே. அதாவது கடந்த தேர்தலை விட இந்த முறை காங்கிரஸ் இங்கு குறைந்த ஓட்டுக்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், தேமுதிகவுக்கும் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. இம்முறை போட்டியிட்ட தங்கவேலு 40,863 வாக்குகளையே பெற்றுள்ளார். இது கடந்த தேர்தலை விட 4,000 வாக்குகள்தான் அதிகம்.

திமுக, தேமுதிகவுக்கு இங்கு பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்காமல் போகக் காரணம் கொங்கு நாடு முன்னேற்றக் கழகமே. இக்கட்சி இங்கு 19,558 வாக்குகளை வளைத்துள்ளது.

அதேசமயம், அதிமுக மற்றும் மதிமுக வாக்குகள் பெரிய அளவில் சிதறவில்லை. இங்கு அதிமுகவோ அல்லது மதிமுகவோ போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X