புலி ஆதரவு கூட்டம்-நெடுமாறன் மீது வழக்கு
சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பொதுக் கூட்டம் போட்டதாக கூறி தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் மீது போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூவில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. பழ.நெடுமாறன், வைகோ, டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட தீப்பந்தங்கள் ஏந்தி உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக பழ.நெடுமாறன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரசு உத்தரவுகளை மீறி அனு மதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட இயக்கத்தலைவர் பிரபாகரன் படம் பொதுக்கூட்டம் மேடையில் வைக்கப்பட்டிருந்தது.
இது போன்ற காரணங்களுக்காக 4 பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications