கல்லல்-ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்லும் சென்னை ரயில்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இனிமேல் கல்லல் ரயில் நிலையத்தில் ஒருநிமிடம் நின்று செல்லும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் (எண்: 6101/6102) கல்லல் ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் வரும் 25ம் தேதி முதல் 6 மாதங்கள் (25.08.09 முதல் 25.02.10 வரை) வரை ஒரு நிமிடம் நின்று செல்லும்.
அதே போல சென்னை சென்டிரல்- திருச்செந்தூர் சிறப்பு ரயில்
இன்று முதல் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- திருச்செந்தூர் இடையிலான சிறப்பு ரயில்கள் (எண்: 0659/0660) இன்று முதல் ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது












Click it and Unblock the Notifications