கேரள வங்கி கொள்ளையன் சேலத்தில் கைது-6 கிலோ தங்கம் பறிமுதல்
திருவனந்தபுரம்: கேரள வங்கியில் 33 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்தவனை போலீசார் சேலத்தில் கைது செய்தனர்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் தேக்கல், பெரியங்கா என்ற இடத்தில் வடக்கு மலபார் கிராமிய வங்கி இயங்கி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி நள்ளிரவு வங்கியி்ன் பின்பக்க ஜன்னலை உடைத்து கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வங்கியின் லாக்கரை உடைத்து 33 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ. 6 லட்சத்து 75 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கேரளாவில் நடந்த இந்த மிகப்பெரிய கொள்ளை சம்பவம் மாநிலம முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக கண்ணூர் டிஐஜி டோமின் ஜெ.தச்சங்கரி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக சேலம் அருகேயுள்ள கச்சராபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் என்பதும் கொள்ளைகும்பலுக்கு அவன்தான் கொள்ளை கும்பல் தலைவன் என்பதும் தெரிய வந்துள்ளது. அவனிடமிருந்து 6 கிலோ தங்கம் மற்றும் 1 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications