ஹரியானாவில் செளதாலா-பாஜக உறவு முறிந்தது

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் விஜய் கோயல் கறுகையில், ஹரியானா சட்டசபைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்றார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சிம்லா சிந்தனையாளர்கள் கூட்டத்தில் செளதாலாவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது சரியாக இருக்காது என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து செளதாலாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக பாஜக தெரிவித்துள்ளது.
செளதாலாவை உடன் வைத்துக் கொள்வதாக மகா எரிச்சலாக இருப்பதாகவும் பாஜக தெரிவித்துள்ளது. மேலும், செளதாலா மீதான வழக்குகளும் தங்களை கடுப்படைய வைத்துள்ளதாகவும் பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம், காங்கிரஸுடன் கூட்டணி வைத்து்க கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக செளதாலாவின் மகன் அஜய் தெரிவித்துள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக - செளதாலா கூட்டணி 10 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்று உறுதியான நிலையில் உள்ளது. இதன் காரணமாகவே முன் கூட்டியே சட்டசபையைக் கலைத்து விட்டு தற்போது அங்கு தேர்தலுக்கு தயாராகியுள்ளது காங்கிரஸ்.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் இணைந்த செளதாலா அதற்கு முன்பு வரை ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போன, நாயுடு, ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர் இணைந்து ஏற்படுத்திய, குறுகிய ஆயுள் காலத்தையே கொண்டிருந்த 3வது அணியில் சில காலம் இடம் பெற்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications
