நான் தோற்றதற்கு ராஜபக்சே காரணமல்ல: அய்யர்

இலங்கையின் மீதும், இலங்கை அரசின் மீதும் குறிப்பாக ராஜபக்சேவுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஒரு சில இந்திய தலைவர்களில் மணிசங்கர அய்யரும் ஒருவர்.
தற்போது கொழும்பு சென்றுள்ளார் அய்யர். அங்கு நடந்த ஒரு கருத்தரங்கில் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அய்யர் பேசுகையில், மயிலாடுதுறை தொகுதியில் நான் தோல்வி அடைந்து இருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி அடைந்து மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளது.
என் தோல்விக்கு ஏதாவது ஒரு காரணத்தை கூற நான் விரும்பவில்லை. இலங்கை அதிபர் ராஜபக்சே என மகள் திருமணத்தில் பங்கேற்ற சி.டி.யை வைத்து எதிர் பிரசாரம் செய்ததால் தான் நான் தோற்றேன் என்பதையும் ஏற்க மாட்டேன். என் தோல்விக்கு ராஜபக்சே காரணம் அல்ல.
வீழ்ச்சியில்தான் வளர்ச்சி தொடங்குகிறது...
தேர்தலில் தோற்று விட்டதால் எனது அரசியல் வாழ்வே முடிவுக்கு வந்து விடாது. அரசியல் வாழ்க்கை நிலையானது அல்ல. நாம் இதன் உச்சியை அடைந்து விட்டோம் என்றால் அடுத்து வீழ்ச்சி தொடங்குகிறது என்று அர்த்தம். அடி மட்டத்துக்கு வந்து விட்டோம் என்றால் வளர்ச்சி தொடங்கி விட்டது என்று அர்த்தம்.
நான் ராஜீவ் காந்தியின் விசுவாசி. அவருடன் பணி புரிந்ததை மறக்க முடியாது.
எனது மகள் திருமணம் ஒரு மினி சார்க் மாநாடு போல இருந்தது. காரணம், இப்போதைய அதிபர் ராஜபக்சே மட்டுமல்லாமல், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், வங்கதேச முன்னாள் வெளியுறவு அமைச்சர், பூட்டான் பட்டத்து இளவரசர் ஆகியோரும் வந்திருந்தனர்.
இப்படி ஒட்டுமொத்த தெற்காசியத் தலைவர்களும் வந்திருந்ததால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்று கூறினார் அய்யர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு படு தோல்வி அடைந்தார் மணிசங்கர அய்யர் என்பது நினைவிருக்கலாம்.
-
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?












Click it and Unblock the Notifications