இலங்கை விமானப்படைதான் உலகிலேயே சிறந்தது - கோத்தபயா ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: உலகிலேயே சிறந்த விமானப்படையை இலங்கைதான் கொண்டுள்ளது என்று இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சே கூறியுள்ளார்.
திரிகோணமலையில் உள்ள சைனா பே என்ற இடத்தில் நடந்த இலங்கை விமானப்படை நிகழ்ச்சியில் கோத்தபயா பேசுகையில், மிகச் சிறிய அளவிலான படைகள் மற்றும் அதி நவீன சாதனங்களைக் கொண்டு விடுதலைப் புலிகளை நாங்கள் வீழ்த்தியுள்ளோம். முற்றிலும் அனுபவம், சாதுரியம், புத்திசாலித்தனம் ஆகியவற்றால்தான் விமானப்படையால் இதை சாதிக்க முடிந்தது.
இந்த வெற்றி எதிர்காலத்தில் மங்கிப் போய் விடாத வகையில் நமது வீரர்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
உலகிலேயே மிகச் சிறந்த விமானப்படையாக இலங்கை விமானப்படை உருவெடுத்துள்ளது என்றார் கோத்தபயா.












Click it and Unblock the Notifications