கச்சத்தீவுக்கு விநாயகர் சிலையைக் கொண்டு செல்ல முயற்சி - 4 பேர் கைது
ராமேஸ்வரம்: விநாயகர் சதுர்த்தியின்போது கச்சத்தீவுக்கு விநாயகர் சிலையைக் கொண்டு செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
கச்சத்தீவில் இந்தியாவுக்கு உள்ள உரிமைகளை இலங்கை பறிப்பதைக் கண்டித்தும், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதைக் கண்டித்தும், கச்சத்தீவுக்கு செல்ல விடாமல் தடுப்பதைக் கண்டித்தும், கச்சத்தீவு ஒப்பந்தப்படி இலங்கை செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் விநாயகர் சதுர்த்தியையொட்டி கச்சத்தீவுக்கு விநாயகர் சிலையை எடுத்து சென்று பிரதிஷ்டை செய்யப் போவதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் 2 அடி உயர விநாயகர் சிலையுடன் மதுரையில் இருந்து ரயில் மூலம் நேற்று ராமேசுவரத்துக்கு புறப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ராமேசுவரம் ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
காலை 10.30 மணிக்கு ராமேசுவரம் ரயில் நிலையத்தில் சிலையுடன் இந்து மக்கள் கட்சியினர் வந்து இறங்கினர். பின்னர் அவர்கள் சிலையை எடுத்துக்கொண்டு கோஷமிட்டபடி ஊர்வலமாக புறப்பட்டு கச்சத்தீவுக்கு செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் இந்து மக்கள் கட்சியினர் 4 பேரை கைது செய்தனர். பின்னர் கைதானவர்கள் சிறப்பு அனுமதி பெற்று அக்னி தீர்த்த கடற்கரைக்கு கொண்டு சென்று விநாயகர் சிலையை கரைத்தனர். இதனால் நேற்று ராமேசுவரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications