ஜப்பான் அடுத்தடுத்து 2 பூகம்பம்-சுனாமி எச்சரிக்கை
டோகியோ: ஜப்பானில் 6.8 மற்றும் 6.5 ரிக்டர் அளவிலான இரண்டு பூகம்பங்கள் அடுத்தடுத்த ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகில் நடக்கும் அதிபயங்கர பூகம்பங்களில் 20 சதவீதம் ஜப்பானில் தான் நடக்கிறது. இதற்கு இந்த நாடு பசிபிக் மற்றும் பிலிப்பைன் கடல் தட்டுக்கள் எனப்படும் இரண்டு நில தட்டுகளுக்கு இடையில் அமைந்துள்ளது தான் காரணம்.
இதனால் அங்கு அடிக்கடி பூகம்பம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5.36 மணிக்கு ஜப்பானின் இஷிகாஹி ஜிமா என்ற தீவில் சுமார் 6.8 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இது முடிந்த சில மணி நேரங்களில் அடுத்த பூகம்பம் அந்த தீவை தாக்கியது. இது 6.5 ரிக்டர் அளவாக பதிவானது.
இந்த இரண்டு பூகம்பங்களும் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது உடனே திரும்ப பெறப்பட்டது. சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த பூகம்ப அலைகள் தைவான் நாட்டிலும் உணரப்பட்டதாகவும், ஆனால் அங்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications