மசூத்தின் மாமனார், மைத்துனர் உள்பட 4 பேரை கொன்ற தலிபான்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவர் பைதுல்லா மசூத்தின் இருப்பிடத்தை அமெரிக்கப் படைகளுக்கு காட்டி கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து மசூத்தின் மாமனார் உள்ளிட்ட நான்கு உறவினர்களை தலிபான்கள் படுகொலை செய்து விட்டனர்.
இத்தகவலை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.
பைதுல்லா மசூத்தை சமீபத்தில் அமெரிக்க படைகள் ஏவுகணை வீசிக் கொன்றன. இதை தலிபான்கள் மறுத்து வருகின்றனர். அவர் உயிருடன்தான் இருப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் ஹக்கீமுல்லா மசூத் என்பவர் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மசூத் கொல்லப்பட்டது உறுதியானது.
இந்த நிலையில் மசூத்தின் இருப்பிடத்தை அவரது மாமனார் உள்ளிட்ட நான்கு உறவினர்கள்தான் காட்டிக் கொடுத்ததாக தலிபான்கள் சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து மாமனார் இக்ரமுதீன், அவரது மகன், இக்ரமுதீனின் சகோதரர்களில் ஒருவர், ஒரு உறவினர் ஆகிய நான்கு பேரை தலிபான்கள் பிடித்து விசாரித்தனர். இதையடுத்து நான்கு பேரையும் கொன்று விட்டனர்.
பைதுல்லா மசூத் கொல்லப்பட்டதை உறுதி செய்த தரப்பே, இந்தத் தகவலையும் தங்களுக்குத் தெரிவித்துள்ளதாக ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 5ம் தேதி தெற்கு வசிரிஸ்தானில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு மசூத் வந்து இரவில் தங்கியிருந்தபோதுதான் அவரை அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் கொன்றது.
மசூத்தின் 2வது மனைவியின் வீடு இது. 2வது மனைவியின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அங்கு இரவில் தங்கினார் மசூத். ஆனால் அதுவே அவருக்கு கடைசி இரவாகி விட்டது.
இந்தத் தாக்குதலில் மசூத்தின் மாமனார் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் உயிருடன் இருந்தது பின்னர் தெரிய வந்தது. ஆனால் தற்போது தலிபான்களே மாமனாரையும், உறவினர்களையும் கொன்று விட்டனர்.
தற்போது தலிபான்களின் புதிய தலைவராகியுள்ள ஹக்கீமுல்லா மசூத், கொல்லப்பட்ட மசூத்தின் ஒன்று விட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications