ஒரிஸ்ஸா ரயிலில் குண்டுவெடிப்பு-மாவோயிஸ்ட் சதி?
புவனேஸ்வர்: ஹாதியா-புவனேஸ்வர் இடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் நேற்றிரவு குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமற்படவில்லை. இந்த சம்பவத்துக்கு மாவோயிஸ்ட்டுகள் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஒரிஸ்ஸா உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 48 மணி நேர பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஜார்க்கண்ட மாநிலம் ஹாதியா பகுதியில் இருந்து ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வருக்கு விவசாயிகளின ரதம் என்றழைக்கப்படும் குறைந்த கட்டணம் கொண்ட எக்ஸ்பிரஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இந்த ரயில் ரூர்கேலா நகருக்கு அருகே நேற்று இரவு வந்த போது ஜி 9 என்ற பெட்டியில் உள்ள கழிவறையில் குண்டு வெடித்துள்ளது.
ஆனால், இந்த சம்பவம் இன்று காலை அந்த ரயில் புவனேஸ்வர் ரயில் நிலையத்துக்கு வந்த பின்னரே வெளியில் தெரிந்துள்ளது. கழிவறைகளை அலசிவிட சென்ற ரயில்வே தொழிலாளி இதை பார்த்து ரயில்வை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவம் நடந்த போது அந்த பெட்டியில் யாரும் இல்லை என்பதாலும், வெடித்த குண்டு அதிக சக்தி அற்றது என்பதாலும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
தற்போது போலீசார் மோப்ப நாய் சகிதம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டு ரயிலுக்குள் வைக்கப்பட்டிருந்ததா அல்லது யாரும் ஓடும் ரயில் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் யாரும் வெடிகுண்டை வீசினார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications