அக். 1 முதல் ரயில்களி்ல் தட்கல் கட்டணம் குறைப்பு
டெல்லி: தட்கல் முறையில் ரயில் டிக்கெட் எடுப்பதற்கான கட்டணக் குறைப்பு அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
2009-2010-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த போது, தட்கல் கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி அக்டோபர் 1-ந் தேதி முதல் தட்கல் கட்டண குறைப்பு அமலுக்கு வருகிறது.
ரயில்வே அமைச்சக உயர் அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில், அனைத்து வகுப்புகளுக்கும், தட்கல் கட்டணத்தை வரும் அக்டோபர் முதல் தேதியில் இருந்து குறைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் படி 2-ம் வகுப்புகளுக்கு 10 சதவீதமும், மற்ற வகுப்புகளுக்கு 30 சதவீதமும், அடிப்படை கட்டணத்தில் இருந்து தட்கல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. 2-ம் வகுப்புக்கு குறைந்த பட்ச கட்டணம் ரூ.10 ஆகும். அதிக பட்சம் ரூ.15.
தூங்கும் மற்றும் குளிர்சாதன அமர்வு வகுப்புகளுக்கு குறைந்த தட்கல் கட்டணம் ரூ.75. அதிக கட்டணம் ரூ.150. குளிர்சாதன 3 மற்றும் 2 டயர்கள், எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கு குறைந்த தட்கல் கட்டணம் ரூ.200. அதிக கட்டணம் ரூ.300.
தட்கல் முறையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த கட்டண குறைப்பு முக்கிய நேரம் மட்டும் இன்றி அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். பயண தூரத்தை கணக்கில் கொண்டு இந்த தட்கல் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.
சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள எக்சிகியூடிவ் வகுப்புகளுக்கும் தட்கல் முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. தற்போது இருக்கும் மொத்த இருக்கைகளில் 10 சதவீதம் இதற்காக ஒதுக்கப்படும். அதாவது ஒரு பெட்டிக்கு 5 இருக்கைகள் வீதம் ஒதுக்கப்படும்.
தட்கல் டிக்கெட்டுக்கான கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான முறையில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. கடந்த 1-ம் தேதி முதல் தட்கல் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யும் காலம் 5 நாட்களில் இருந்து 2 நாட்களாக ரயில்வே துறை குறைத்து இருக்கிறது.
-
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications