தமிழகத்தி்ல் குறுவை சாகுபடி குறையும்!!
திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் வழக்கத்தை விட 57 ஆயிரம் ஏக்கர் நிலம் குறைவாக சாகுபடி செய்து வருவதாக என்று வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் பயிர், நிலங்களை தமிழக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
திருவாரூர் மாவட்டத்தில் சராசரி ஆண்டு மழை அளவு 1,230 மிமீ ஆகும். ஆனால், நடப்பு ஆண்டில் இதுவரை 343 மிமீ மட்டுமே பெய்துள்ளது.
இங்கு மொத்த சாகுபடி பரப்பு மூன்று லட்சத்து 62 ஆயிரத்து 43 ஏக்கர். இதில் 25 ஆயிரம் ஏக்கர் மட்டும் ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்ய முடியும். மீதமுள்ள மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 43 ஏக்கர் நிலம் ஆற்று தண்ணீரை நம்பி தான் இருக்கிறது.
நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பான 90 ஆயிரம் ஏக்கரில் 33 ஆயிரத்து 175 ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 56 ஆயிரத்து 750 ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் கிடக்கின்றன.
இதை ஈடு கட்டும் வகையில் சம்பா சாகுபடி மூன்று லட்சத்து 28 ஆயிரத்து 868 ஏக்கரில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரம் போன்றவைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இது வரை வணிக வங்கிகள் மூலம் ரூ 104.3 கோடியும், கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ 16.78 கோடியும் என மொத்தம் ரூ 121.08 கோடி விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications