For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உணவுப் பொருள் விலை உயர்வு: பணவீக்கம் 0.60 புள்ளிகள் உயர்ந்தது!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட திடீர் விலையேற்றம் காரணமாக பணவீக்கம் -1.53 புள்ளியிருந்து -0.95 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதியுடன் முடிவடையும் வாரத்துக்கான பணவீக்க விவரத்தை மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியி்ட்டுள்ளது.

தொடர்ந்து 11 வாரங்களாக இந்திய பணவீக்க அளவு மைனஸிலேயே இருந்து வருகிறது. இந்த வாரம் அந்த நிலையில் பெரிய அளவு மாறுதல் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 0.60 புள்ளிகள் வரை உயர்வு கண்டுள்ளது மொத்த விலை்க குறியீ்ட்டெண்ணில்.

உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட திடீர் உயர்வே இந்த மாற்றத்துக்குக் காரணமாகும். மீன் விலை 25 சதவிகிதமும், முட்டை விலை 10 சதவிகிதமும், பால் விலை 5 சதவிகிதமும் ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் பணவீக்கம் அளவு 12,.82 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X