ஜூலை மாத தொழில்துறை உற்பத்தி 7 சதவீதம்!
டெல்லி: தொழில்துறை உற்பத்தி இந்த ஜூலை மாதம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இது அதிக வளர்ச்சி என்று மத்திய தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் தொழில்துறை உற்பத்தி 7.8 சதவீதமாக இருந்தது.
"கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தொழில் துறை உற்பத்தி குறியீட்டெண்ணில் இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொழில்துறையுடன் தொடர்புடைய இதர துறைகளின் உற்பத்தியிலும் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் இது தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது", என்றார் ஆனந்த் சர்மா.
ஆனால் சில தினங்களுக்கு முன்புதான் சார்புத் துறை சார்ந்த 6 தொழில்களின் உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவு மிக அதிகபட்ச வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை அதிகாரிகள் புள்ளிவிவரங்களை வெளியிட்டிருந்தனர். இந்த 6 தொழில்களில் மட்டும் 1.8 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications