கோவை-திருப்பூரில் நாளை இந்து முன்னணி பந்த்
திருப்பூர்: திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் நாளை திருப்பூர், கோவையில் பந்த் நடத்தப்படும் என அதன் மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன், ஊர்வலம் மீது சில விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக மிக அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்பட்டு வருகிறது
கடந்த 14 ஆண்டுகளாக வழக்கமான முறையில், எவ்வழியாக விநாயகர் ஊர்வலம் நடந்ததோ, அதே முறைப்படி இந்தாண்டும் விநாயகர் ஊர்வலம் நடந்தது. ஆனால், சில விஷமிகள் வேண்டும் என்றே கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் மீதும் கற்கள் வீசிப்பட்டுள்ளது.
அதேபோல், விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு, அமைதியாக திரும்பியவர்கள் மீதும் காங்கேயம் ரோட்டில் பயங்கர ஆயுதங்களுடன் திரண்டிருந்த கும்பல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், வேனை அடித்து நொறுக்கி, அதில் இருந்த மூவரை தாக்கியுள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பூர் மற்றும் கோவையில் நாளை 28.08.2009 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பந்த் நடைபெறும்.
இந்த பந்த்க்கு அனைத்து தரப்பு பொது மக்களும் ஆதரவு தர வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications