காங். இன்றி திமுக ஆட்சியில்லை-ஞானசேகரன்
வேலூர்: திமுக இல்லாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்த முடியும், நாம் ஆதரவு தந்தால் தான் கருணாநிதியால் முதல்வராக இருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் கலந்து கொண்டு பேசுகையில்,
திமுக இல்லாமல் கூட மத்தியில் காங்கிரசினால் ஆட்சி நடத்த முடியும். திமுகவிற்கு 99 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். அமைச்சர் பதவி தராவிட்டாலும் பரவாயில்லை என கூட்டணி தர்மத்துக்காக நாம் அவர்களை அனுசரித்துப் போகிறோம்.
காங்கிரஸ் இல்லாமல் திமுகவினால் ஆட்சி நடத்த முடியாது. நாம் ஆதரவு தந்தால் தான் கருணாநிதியால் முதல்வராக இருக்க முடியும்.
ஆனால், திமுகவினர் நமக்கு எந்த பொறுப்பையும் தரமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றனர். ஏன், கோவில் அறங்காவலர் பதவியை கூட காங்கிரஸ்காரர்களுக்கு தர மறுக்கின்றனர்.
திமுக பணத்தால் சாதிக்க நினைக்கிறது...
தமிழகத்தில் 2010ம் ஆண்டு தேர்தலை நடத்த திமுக முடிவு செய்துள்ளது. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என திமுக நினைக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போன்று, எப்போதும் வெற்றி பெற்று விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர். நம்முடன் கூட்டணியில் இருப்பவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும்.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி தொடர்ந்தால் நமக்கு சரிவுதான் ஏற்படும். அதனால், நாம் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் இளைஞர் பட்டாளத்தை நாம் சேர்க்க வேண்டும். அப்போதுதான் கட்சி உயிரோட்டமாக இருக்கும் என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications