அவதூறு-எஸ்.வி.சேகருக்கு சசிகலா நோட்டீஸ்
கும்பகோணம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குறித்து அவதூறு பேசியதாக நடிகரும் எம்எல்ஏவுமான எஸ்.வி சேகருக்கு சசிகலாவின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கும்பகோணம் வந்த எஸ்.வி.சேகர் இதைத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நான் அவதூறாக பேசியதாக சசிகலாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அவர் மீது நான் அவதூறு கூறவில்லை.
சசிகலா அதிமுகவின் நிர்வாகக் குழுவில் உள்ளார். அவர்களது உறவுக்காரர்களின் மிடாஸ் மது ஆலையில் தான் தமிழக அரசு 40 சதவீதம் மது வகைகளை கொள்முதல் செய்கிறது.
தமிழக அரசு கவிந்து விட வேண்டும் என்ற சொல்பவர்கள், சசிகலா குழுமத்தின் மிடாஸ் சரக்குகளை தமிழக அரசுக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்ல வேண்டும்.
அதிமுகவைப் பற்றி முன்பே தெரிந்திருந்தால் அங்கு சென்றிருக்க மாட்டேன். என்னை கட்சியிலிருந்து நீக்கியது குறித்து அதிமுக சபாநாயகருக்கு எந்தவித கடிதமும் அனுப்பவில்லை.
அரசியலைப் பொறுத்தவரை இடைத்தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிக ஓட்டு பெற்று ஆளுங்கட்சி கூட்டணி 5 இடங்களிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.
ரசிகர்களுக்கு பிடித்தமானதை செய்தால் தான் சூப்பர் ஸ்டாராக முடியும். அதுபோல் மக்களுக்கு என்ன வேண்டுமோ, அதை சரியாக சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள்.
அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு வேண்டுகோளை மக்கள் ஏற்கவில்லை. தேர்தலை புறக்கணிப்பதாக சொன்னது கோழைத்தனமான முடிவு என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications