சிவகாசி அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கல். இங்கு எஸ்.ஆர்.என். அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பை சேர்ந்த இரண்டு பிரிவு மாணவர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் சில மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மோதல் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அமைதி ஏற்படுத்தினர்.
இரண்டு பிரிவு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மாவட்ட கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications