மாஜி அமைச்சர் என்கேகேபி ராஜாவுக்கு பிடிவாரண்ட்
ஈரோடு: ஆள் கடத்தல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து, முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி ராஜா உள்ளிட்ட ஏழு பேருக்கு, பெருந்துறை நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை கல்லாங்குத்து தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி. இவரது மனைவி மலர்விழி, மகன் சிவபாலன், தம்பி குகமணி.
இவர்கள் நான்கு பேரும் கடந்த ஆண்டு சொத்துக்காக மர்ம நபர்கள் மூலம் கடத்தப்பட்டனர். இந்த கடத்தலுக்கு காரணம் என அப்போதைய, கைத்தறித்துறை அமைச்சர் ராஜா உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற தலையீட்டால், கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரனைக்கு மாற்றப்பட்டது. வழக்கின் முக்கிய சாட்சியான சிவபாலன், கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்தார்.
கடந்த ஜூலை 16 ம் தேதி, கர்நாடக மாநிலத்தில் சுற்றித்திரிந்த சிவபாலனை, சி.பி.சி.ஐ.டி போலீசார் மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சிவபாலன் மூன்று நாட்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, 27 பக்க ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தன்னை மாஜி அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாதான் கடத்தினார் என்று வாக்கு மூலம் அளித்தார்.
இதனையடுத்து, மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஆள் கடத்தல், வீடு இடிப்பு, பழனிசாமியின் தந்தை சின்னசாமி இறந்தது, சிவபாலனை மீட்டுத் தரக்கோரி அவரது தாயார் கொடுத்த புகார் என, நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், ஆள் கடத்தல் மற்றும் வீடு இடிப்பு வழக்கை சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரிக்கின்றனர். மற்ற இரண்டு வழக்கையும் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக, பெருந்துறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், சி.பி.சி.ஐ.டி.போலீசார் கடந்த 11 ம் தேதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா உட்பட 30 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் என்.கே.கே.பி. ராஜா 14 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதை பெருந்துறை நீதிமன்றம் நேற்று முன்தினம் ஏற்றுக் கொண்டது.
இந்த வழக்கிகல் என்.கே.கே.பி. ராஜா உள்ளிட்ட ஏழு பேர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா, ஈரோடு மாவட்ட தி.மு.க. துணைத்தலைவர் விஸ்வநாதன், சுந்தரம், சுந்தர்ராஜன், சின்னப்பன், மணியக்காரர் குமார், பெருந்துறை சார்பதிவாளர் அன்பழகன் ஆகிய ஏழு பேரையும் கைது செய்யும்படி, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications