30 வி.ஐ.பிக்களுக்கு வழங்கப்படும் எக்ஸ் பாதுகாப்பு ரத்தாகிறது
டெல்லி: 30 விஐபிக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரிவு பாதுகாப்பை ரத்து செய்ய மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.
பாதுகாப்புப் படையினர் பற்றாக்குறை காரணமாக இந்த முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதுதொடர்பாக நீண்ட ஆய்வு மற்றும் விவாதத்திற்குப் பின்னர் இம்முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாம்.
ஏற்கனவே முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சபர்வால், நடிகர் கோவிந்தா, உ.பி. அரசியல் தலைவர் டி.பி.சாதவ், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அன்வர் உசேன், டெல்லியைச் சேர்ந்த 2 பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட 23 பேரை, விஐபிக்கள் பட்டியலிலிருந்து நீக்கிய மத்திய அரசு அவர்களுக்கான பாதுகாப்பையும் ரத்து செய்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் எக்ஸ் பாதுகாப்பு வளையத்தின் கீழ் வரும் 30 பேருக்கு அந்தப் பாதுகாப்பை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள நிலையிலும் கூட தனக்கு தேவையில்லாமல் அதிகபட்ச பாதுகாப்பு வேண்டியதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதையே முன்னுதாரணமாகக் கொண்டு மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.
தற்போது 30 பேர் நீக்கப்பட உள்ளதைத் தொடர்ந்து எக்ஸ் பிரிவு பாதுகாப்புப் பட்டியலில் உள்ளோரின் எண்ணிக்கை 20 ஆக குறைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications