பன்றிக் காய்ச்சல் - புனேவில் 26வது பலி: நாடு முழுவதும் 93 பேர் மரணம்
டெல்லி : இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 100ஐ நெருங்கி விட்டது. இதுவரை 93 பேர் பலியாகியுள்ளனர். புனேவில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மட்டும் 139 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
நேற்று பெங்களூரில் இருவரும், பீஜப்பூரில் ஒருவரும் இறந்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல கேரளாவிலும் ஒருவர் உயிரிழந்தார்.
பீஜப்பூரைச் சேர்ந்த 3 வயதான கெளடப்பா பிரதார் என்ற சிறுவன் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தான். கர்நாடகத்தில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியான மிகக் குறைந்த வயது நபர் கெளடப்பாதான்.
இவன் தவிர பெங்களூரைச் சேர்ந்த செளபாக்யா (48), அஸ்ரா கெளசர் (35) ஆகியோரும் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.
புனேவில்...
புனேவில் 28 வயதான கர்ப்பிணிப் பெண் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தார். அவரையும் சேர்த்து இதுவரை புனேவில் மட்டும் 26 பேர் இறந்துள்லனர்.
இறந்த பெண்ணின் பெயர் ரூபாலி ஜோர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதுவரை இந்தியாவில் அதிக அளவில் மகாராஷ்டிரத்தில்தான் 48 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக கர்நாடகத்தில் 23 பேரும், குஜராத்தில் 7 பேரும், தமிழ்நாடு, சட்டீஸ்கர், டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா 3 பேரும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 பேரும், கேரளா, கோவா, ராஜஸ்தான், ஹரியானாவில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications