சாத்தூர் பட்டாசு ஆலையில் விபத்து-2 பேர் பலி
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் தற்போது தீபாவளி பட்டாசுத் தயாரிப்பு மும்முரமாக உள்ளது. இந்த நிலையில் சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சமீபத்தில் அடுத்தடுத்து பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சாத்தூர் அருகே இன்று பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை என்ற இடத்தில், உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் சங்கு சக்கரத்தில் மருந்தை சேர்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் குருசாமி மற்றும் முனுசாமி ஆகிய இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்ததும், தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் விரைந்து வந்தனர்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications