மக்கள் தொகையோ 6 கோடி - ரேஷன் கார்டுகளோ 8 கோடி - அமைச்சர் வேலு தகவல்
விழுப்புரம்: கடந்த 2001 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, தமிழக மக்கள் தொகை 6 கோடியே 65 லட்சத்து 66 ஆயிரம் ஆகும். ஆனால், ரேஷன் கார்டுகளோ 8 கோடி உள்ளது என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியும் தணிக்கை ஆய்வு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
தமிழக உணவுத்துறை அமைச்சர் வேலு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில்,
விலைவாசி உயர்ந்தாலும் மலிவு விலை பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் மட்டுமே மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு ஆதாரமே ரேஷன் கார்டுகள் தான்.
போலி ரேஷன் கார்டுகள் அதிகரித்து தவறுகளுக்கு வழி வகுக்கின்றன. இதை முறைப்படுத்த தான் தணிக்கை செய்யப்படுகின்றது.
இதன் முதற்கட்டமாக 10 மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக 16 மாவட்டங்களிலும், மூன்றாம் கட்டமாக இதர மாவட்டங்களிலும் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியும் தணிக்கை நடந்து வருகிறது.
முறையாக ஆய்வு செய்யப்பட்டதில் சென்னை அண்ணா நகரில் 58 ஆயிரத்து 307, கோவையில் 2 லட்சம், திருச்சியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 816 போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2001 ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி, தமிழக மக்கள் தொகை 6 கோடியே 65 லட்சத்து 66 ஆயிரம் பேர் இருந்தனர். ஆனால், ரேஷன் கார்டுகள் 8 கோடி உள்ளன. இதிலிருந்தே போலி ரேஷன் கார்டுகள் எந்தளவு அதிகரித்துள்ளது என்பதை கண்டறியலாம்.
இறந்தவர்களின் பெயர்களை ரேஷன் கார்டுகளில் நீக்காததால் தான் இது போன்ற நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, வீடு வீடாக ஆய்வு செய்யும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications