தமிழர் முகாம்கள் குறித்த ஐ.நா. அறிக்கை- இருட்டடிப்பு செய்யும் பான் கி மூன், விஜய் நம்பியார்: கஸ்பார்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கஸ்பார் கூறுகையில்,
இலங்கையில் செப்டம்பர் மாத இறுதியில் மழைக்காலம் தொடங்கி விடும். அதற்கு முன்பாக அங்கு மழைக் காலத்தை தாங்கும் கட்டுமான வசதிகளோ, மருத்துவ ஏற்பாடுகளோ இல்லாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 3.5 லட்சம் ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்பட்டாக வேண்டும்.
இல்லாவிட்டால் மழைக்காலத்தில் அந்த முகாம்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மறைக்கும் பான் கி மூன், விஜய் நம்பியார்...
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தூதுவர்கள் போல செயல்படும் ஐ.நா. பொதுச்செயலர் பான்-கி-மூன், அவரது செயலர் விஜய் நம்பியார் ஆகியோர் அந்த அறிக்கையை இருட்டடிப்பு செய்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன.
எனவே, மழைக்காலம் தொடங்கும் முன்பு முகாம்களில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை முதல்வர் கருணாநிதி அனைத்து அரசியல் கட்சியினருடன் சென்று வலியுறுத்த வேண்டும்.
இந்த பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்கள், தமிழ் அமைப்புகள் ஒரு கருத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று நாம் அமைப்பு கேட்டுக்கொள்கிறது. ஏற்கனவே இதுகுறித்து பிரதமருக்கு அக்கறையுடன் கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
நிராயுதபாணிகளான தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையில் இலங்கை ராணுவத்தினரால் தலையில் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ பட ஆவணங்கள் உண்மையானவைதான் என்று தெரியவந்துள்ளது.
இலங்கையில் இருதரப்பினர் மீதான யுத்த குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் இந்திய வெளியுறவு கொள்கையை உருவாக்குவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் திறந்தவெளி முகாம்களின் நிலையை நேரில் கண்டு வருவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்று நாம் அமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றார் கஸ்பார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications