'ராஜவைத்தியர்' விஜயக்குமார் வீடு, மருத்துவமனையில் ரெய்டு - ஆவணங்கள் பறிமுதல்
சென்னை: கோடிக்கணக்கில் நோயாளிகளிடம் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ள திருவிதாங்கூர் ராஜவைத்தியர் டாக்டர் விஜயக்குமாரின் வீடு மற்றும் மருத்துவமனையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
சென்னை மயிலாப்பூரில், திருவிதாங்கூர் ராஜவைத்தியசாலை என்ற பெயரில் மருத்துவமனை வைத்துள்ளார் விஜயக்குமார். இவர் மீது கோடிக்கணக்கில் பணம் பறித்ததாக நோயாளிகள் சிலர் புகார் கொடுத்தனர்.
மான்கறி வைத்தியம், கோழிக்கறி வைத்தியம் என்று கூறி பணம் பறித்ததாக விஜயக்குமார் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஜூலை 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு பின்னர் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
விஜயகுமாரிடம், மோசம் போனதாக இதுவரை 60 பேர் புகார் கொடுத்து உள்ளனர். ரூ.3 கோடி வரை பணம் மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மீது மொத்தம் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதில் 2 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்து உள்ளது. மற்ற வழக்குகள் தொடர்பாக அவரை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் டாக்டர் விஜயகுமாரின் மருத்துவமனை, அலுவலகம் மற்றும் அவருடைய வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சென்னை தியாகராயநகரில் 3 நட்சத்திர ஹோட்டல் மற்றும் மதுரையில் வீடு, பழத்தோட்டம் போன்ற சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளதாகவும் கோர்ட்டு மூலம் இந்த சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
விஜயக்குமார் கைதான பின்னர் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பல கோடி ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இவை எங்கு பதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தனக்கு ஏழரை நாட்டு சனியால்தான் இவ்வவளவு தொல்லைகளும், கெட்ட பெயரும் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் விஜயக்குமார், போலீஸாரிடம் தெரிவித்துள்ளாராம்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications