மகாராஷ்டிரா, ஹரியானா, அருணாச்சல் பிரதேசம் - அக். 13ல் சட்டசபைத் தேர்தல்

தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா இன்று அறிவித்தார்.
மூன்று மாநிலங்களிலும் சட்டசபை பொதுத் தேர்தல் அக்டோபர் 13ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 22ம் தேதி நடைபெறும்.
மூன்று மாநிலங்களிலும் வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 18ம் தேதி தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 27ம் தேதி. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 29.
லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 100 நாட்களை கடந்துள்ள நிலையில் வரும் முக்கிய தேர்தல் இது என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாநிலங்களிலும் தற்போது காங்கிரஸ் ஆட்சியே நடந்து வருவதால் 3 மாநிலங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
விலைவாசி உயர்வுப் பிரச்சினை, வறட்சி ஆகியவை முக்கியப் பிரச்சினைகளாக தேர்தல் களத்தில் இருக்கும்.
ஹரியானா சட்டசபையின் ஆயுள் காலம் அடுத்த ஆண்டு வரை இருந்தாலும் கூட முன்கூட்டியே அங்கு சட்டசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளும், ஹரியானாவில் 90 சீட்களும், அருணாச்சல் பிரதேசத்தில் 60 தொகுதிகளும் தேர்தலை சந்திக்கவுள்ளன.
தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து 3 மாநிலங்களிலும் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications