போலீசாரை சிறைபிடித்து மணல் கொள்ளை- கேரள கும்பல் அட்டகாசம்

கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு மணல், எரிசாராயம், ரேசன் பொருட்கள் கடத்தப்படுகின்றன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் லாரிகள் மூலம் மணல் கடத்தல் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன.
இதை தடுக்க எல்லை பகுதியில் 18 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடையாலுமூடு பஞ்சாயத்திற்குட்பட்ட கேரள-குமரி எல்லையில் உள்ள நோட்டா சோதனை சாவடியில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் 4 ஏட்டுகள் பணியில் இருந்துள்ளனர்.
அதிகாலை 3 மணி அளவில் 25க்கும் அதிகமான அடங்கிய ரவுடி கும்பல் சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாரை நோக்கி கல் வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அவர்களை சிறைபிடித்தது.
அப்போது நம்பர் பிளேட் இல்லாத நிலையில் 25க்கும் மேற்பட்ட லாரிகள் சோதனை சாவடி தடுப்புகளை உடைத்து தள்ளியபடி அம்பூரி பஞ்சாயத்து வழியாக கேரளாவுக்குள் நுழைந்தன.
சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தின்போது அக்கும்பலை எதிர்கொள்ள போலீசாரிடம் துப்பாக்கி உள்ளிட்ட எந்த ஆயுதமும் இல்லை. இதனால் போலீசாரை அந்த கும்பல் எளிதில் சுற்றி வளைக்க முடிந்தது. மணல் லாரிகள் அனைத்தும் சென்ற பின்னர் அந்த கும்பல் அவர்களை விடுவித்து விட்டு சென்றது.
இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications