பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த 2 பேர் திடீர் சாவு
சென்னை: சென்னையில் பஸ்சுக்காக காத்திருந்த 2 பேர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது..
சென்னை புளியந்தோப்பு பஸ் நிறுத்தத்தில் இன்று காலை பலர் காத்திருந்தனர். அப்போது முதியவர் ஒருவர் அங்கு வந்தார். பஸ்சுக்காக காத்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்து போனார்.
அவரது கையில், ஆர்.ஏ. என்ற எழுத்துக்கள் பச்சை குத்தப்பட்டுள்ளன. வேட்டி, சட்டை அணிந்திருந்தார். கொரட்டூரைச் சேர்ந்த ஒரு டெய்லர் கடை முகவரி சட்டையில் காணப்படுகிறது.
இதுபோல புளியந்தோப்பு கன்னிகாபுரம் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த ஒருவர், பஸ்சுக்காக உட்கார்ந்திருந்தபோது அப்படியே மரணமடைந்தார்.
இறந்த இருவருக்கும் 55 வயதுக்கு மேல் இருக்கும். இருவரும் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இருவரும் ஒரே பகுதியில் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications