ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 5 குடும்பங்கள்!
தர்மபுரி: தர்மபுரி அருகேகே பஞ்சாயத்துக் குடிநீர் இணைப்பு பெறுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஐந்து குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நூலஹள்ளி கிராமத்தை சேர்ந்த கோபால், அவரது மகன் கிருஷ்ணன், கோபால் தம்பி குப்புசாமி, குப்புசாமியின் மகன்கள் செந்தில், சிவக்குமார். அனைவரும் தத்தமது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோபால், அவரது தம்பி மகன் சிவக்குமார் ஆகியோர், தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் கொடுத்தனர்.
அதில்,
எங்கள் வீட்டிற்கு பஞ்சாயத்து குடிநீர் இணைப்பு பெறுவதில் தகராறு ஏற்பட்டது. இதில், ஊர் கவுண்டர் மற்றும் சிலர், கட்டப் பஞ்சாயத்து நடத்தி எங்கள் ஐந்து குடும்பங்களையும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
எங்கள் ஊரை சேர்ந்த யாரும் எங்களது நிலத்தில் வேலை பார்க்க வரக்கூடாது, சுக, துக்க நிகழ்ச்சிகள், கோவில் விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஊர் மக்களுக்கு விதித்துள்ளனர்.
இதனால், நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனு குறித்து உடனே விசாரணை நடத்த காவல்துறைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இன்னும் நாட்டாமை பட பாணியில் இருந்து வரும் இவர்களை என்னவென்று சொல்வது...?
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications