ரூ. 50 ஆயிரத்துக்கு குழந்தையை விற்று ஊர் சுற்றிய தந்தை
தென்காசி: பிறந்து 10 மாதமே ஆன குழந்தையை ரூ. 50 ஆயிரத்துக்கு விற்று அந்த பணத்தை ஜாலியாக செலவழித்த தந்தையிடம் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மனைவி பழனியம்மாள் (48). இவர் சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது அந்த பக்கமாக வந்த மூன்று பேர் அவரது கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்றனர்.
இதையடுத்து அவர், தென்காசி போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் போலீசார் மின்நகரில் சந்தகேத்துக்கு இடமான வகையில் சுற்றி கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் பூலாங்குடியிருப்பு மீரான் மைதீன் (24), மீரான்கனி (24), காயல்பட்டிணம் செய்யது சலீம் (31) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் 3 பேரும்தான் பழனியம்மாளிடம் சங்கிலியை பறித்து சென்றதும் தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் தெரிவித்த மேலும் பல தகவல்கள் போலீசாரை திடுக்கிட வைத்துள்ளது.
அதன் விபரம்:
மீரான் மைதீனின் அக்காள் செய்யது அலி பாத்திமாவை செய்யது சலீம் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின்னர் செய்யது சலீம் வறுமையில் கஷ்டப்பட்டார். இதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து நகை மோசடி செய்ய முடிவெடுத்துள்ளனர்.
சமீபத்தல் புளியரை பகுதியில் நகை மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் மீரான் மைதீனை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்னர் தான் சிறையில் இருந்து வெளிவந்தார். வந்தவுடன் தனது அக்காவை சென்று பார்த்துள்ளார். அவர்கள் வறுமையில் இருப்பதை பார்த்த மீரான் மைதீன், அவர்களது 10 மாத குழந்தையை விற்றால் வறுமையை போக்கலாம் என ஐடியா கொடுத்துள்ளார்.
இதற்கு அவரது அக்காவும், அவரது கணவர் செய்யது சலீமும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீரான் மைதீனும், செய்யது சலீமும் குழந்தையை ஏர்வாடி தர்ஹாவில் சென்று ரூ. 50 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர்.
இந்த பணத்துடன் திருப்பூர் சென்ற அவர்கள் மீரான் கனி என்பவருடன் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றி பணத்தை செலவழித்துள்ளனர். பின்னர் ஊர் திரும்பியுள்ளனர்.
பின்னர் ஊர் சுற்ற காசு இல்லாததால் பழனியம்மாளின் நகையை பறித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications